search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் டிரைவர்களின் பாசமும்.. பாதுகாப்பும்..
    X

    பெண் டிரைவர்களின் பாசமும்.. பாதுகாப்பும்..

    ஆண்கள் கலக்கி கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த கால் டாக்சி துறையில் இப்போது பெண்களும் பலமாக காலூன்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கார் டிரைவர்களாக பணிபுரிவதோடு மட்டுமின்றி, புதிதாக கால் டாக்சி நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவும், சிலர் பகுதி நேரமாகவும் டிரைவர் பணியை தொடர்கிறார்கள். இவர்களுக்கு முறையாக கார் ஓட்டும் பயிற்சியும், பொதுமக்களுடன் இனிமையாக பேசிப் பழகும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு விசேஷ பாதுகாப்பு பயிற்சிகள், மனோதிட பயிற்சிகள், தியான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான நேரங்களில் சுயமாக முடிவெடுக்கும் தைரியத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆபத்துகளை துணிச்சலாக சமாளிக்கும் முறைகளையும் கற்றிருக்கிறார்கள். இத்தகைய பயிற்சிகள் அனைத்தையும் அவர்கள் பெற ஒரு வருடமாகியிருக்கிறது.

    இந்த பெண் கால் டாக்சி டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்தோடு பழகுகிறார்கள். அது மட்டுமின்றி ஏதாவது பொருட்களை அவர்கள் காரில் மறந்துவிட்டுச் சென்றாலும், தேடிப்பிடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்கள். பெண்கள் எந்த நேரமும் பயமின்றி பாதுகாப்புடன் பயணிக்கலாம் என்ற சூழலை இந்த கால் டாக்சி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

    இரவு நேர பணி செய்யும் பெண்கள், தனியாக பயணிக்கும் பெண்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். சில நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பயணிப்பார்கள். அவர்களுக்கும் நாங்கள் கார் ஓட்டுகிறோம். கடைசியாக இறங்கும் பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்புவோம். இதன் மூலம் வீட்டில் உள்ளவர் களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்க நாங்கள் காரணமாக இருக்கிறோம்.

    எங்கள் டிரைவர்கள் பெண்கள் என்பதால் அவர்களும் முழுநேரமும் எங்கள் கண்காணிப்பிலே இருப்பார்கள். அவர்கள் வீடு போய் சேரும் வரை எங்கள் தகவல்தொழில்நுட்பம் அவர்களை பின்தொடரும். அவர்கள் எப்பொழுதும் கண்ட்ரோல் ரூமுடன் தொடர்பிலேயே இருப்பார்கள். டெல்லி காவல்துறையின் தொடர்பும் எங்கள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. பயமின்றி கார் ஓட்டி பலரது பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

    கார் ஓட்டுவது மட்டும் வேலையல்ல. பொதுமக்களிடம் நாகரிகமாக பழகுவது, அவசரகாலத்தில் உதவுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எல்லாமே எங்கள் பெண் டிரைவர்களின் பணியின் ஓர் அங்கம்தான். அதனாலேயே மக்கள் எங்கள் சேவையை பெரிதும் விரும்புகிறார்கள். நடிகர் அமீர்கான் டெல்லி வந்தால் எங்கள் நிறுவத்தில்தான் கார் பதிவு செய்வார். தனக்கு மிகவும் பிடித்த நிறுவனம் என்று பலமுறை எங்களை பாராட்டி இருக்கிறார். தொழிலதிபர்கள், நடிகைகள், முக்கிய புள்ளிகள் என் பல தரப்பினரும் எங்கள் பெண் டிரைவர்களின் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆதரவற்ற பெண்கள் பலர் நம்பிக்கையோடு எங்களுடன் சேர்ந்து ஓட்டுனர் பயிற்சி பெற்று இன்று நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். 
    Next Story
    ×