search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நகர்ப்புறங்களில் வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்
    X

    நகர்ப்புறங்களில் வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்

    சென்னை போன்ற பெரு நகரங்களில் இளைய தலைமுறையினர் வில்லா, அடுக்குமாடி வீடுகள், வீட்டுமனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை.
    சென்னை போன்ற பெரு நகரங்களில் இளைய தலைமுறையினர் வில்லா, அடுக்குமாடி வீடுகள், வீட்டுமனை போன்ற சொத்துக்களை வாங்குவது அதிகமாகி வருகிறது. தாய்தந்தையரின் கனவுகளை அவர்களது கல்வி கற்ற வாரிசுகள் நிறைவேற்றுவது பல குடும்பங்களில் வழக்கமாகி வருகிறது. அது போன்ற தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலைகளில் அவர்கள் ஒரு வித பதட்டமும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வில் இருப்பது வழக்கம்.

    மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் வாங்கப்படும் சொத்து பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் குறிப்பிடும் கீழ்க்கண்ட ஆவணங்களை சரி பார்த்துகொள்வது முக்கியம்.

    தாய் பத்திரம்

    குறிப்பிட்ட ஒரு சொத்திற்கான உரிமை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடும் ஆவணம் தாய்ப்பத்திரம் ஆகும். ஒன்றுக்கு ஏற்பட்டதாகவோ அல்லது அவற்றில் ஏதேனும் தகவல் விடுபட்டுள்ளதாக கண்டறியப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியின் சார்-பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

    விற்பனை பத்திரம்

    பத்திரத்தில் உள்ள விற்பனை வரைவை, ஒரு வழக்கறிஞர் மூலம் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை சரியாக இருக்கிறதா..? என்பதை சோதித்துக்கொள்வது அவசியம்.

    வரி ரசீதுகள்

    வாங்கப்படும் சொத்தினை விற்பவர் வாங்கப்படும் நாள் வரையில் வரி வகைகளை சரியாக செலுத்தியிருக்கிறாரா..? என அதற்கான ரசீதுகளை ( receipts) பெற்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.

    உரிமைப்பத்திரம்

    சொத்து வாங்கப்படும் முன்பு அதன் அசல் உரிமைப் பத்திரத்தை பெற்று, அதை வழக்கறிஞர் மூலம் சரி பார்த்துக் கொள்ளவேண்டும். அந்தச் சொத்து அடமானம் வைக்கப்பட்டிருப்பது அல்லது தனி நபருக்கு விற்கும் உரிமை தரப்பட்டிருக்கும் நிலை ஆகியவை விபரங்கள் பற்றி கவனித்துக்கொள்லவேண்டும். அந்த ஆவணத்தில் விற்பவரின் விவரங்கள் மட்டும் இருக்கவேண்டும்

    வில்லங்க சான்று

    சொத்து அமைந்துள்ள பகுதியின் சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து வில்லங்க சான்றிதழ் ( certificate) பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சொத்து சம்பந்தமாக நடந்த பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை அதில் காணலாம்.

    சொத்திற்கான வரைபடம்

    சர்வே துறை மூலம் சம்பந்தப்பட்ட சொத்தின் திட்ட வரைபடத்தை ( sketch) பெற்று, விற்பவரால் சொல்லப்பட்ட அளவுகள் கச்சிதமாக இருக்கிறதா..? என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.

    அதிகார பத்திரம்

    சொத்தினை விற்பவர், அதை விற்பதற்கான உரிமையை, அதிகார பத்திரம் of Atto-rney) மூலம் வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருக்கும் பட்சத்தில், அதன் நிலை பற்றி சரியாக அறிந்து செயல்பட வேண்டும்.

    விடுவிப்பு சான்றிதழ்

    வாங்கப்படும் வீடு அல்லது மனை மீது இதற்கு முன்பு வங்கி கடன் பெற்றிருக்கும் பட்சத்தில் அதன் மாதாந்திர தவணைகள் முற்றிலும் திரும்ப செலுத்தப்பட்டு, வங்கியிலிருந்து விடுவிப்பு சான்றிதழ் (certificate) தரப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்வது முக்கியம். காரணம், பின்னர் இதர காரணங்களுக்காக வங்கியில் அந்த சொத்தின்மீது கடன் பெற முயற்சிக்கும்போது வங்கி விடுவிப்பு சான்றிதழ் முக்கியமானது.

    வழக்கறிஞர் வழிகாட்டல்

    பொதுவாக, ஒரு சொத்து வாங்கப்படும்போது பாதுகாப்பின் அடிப்படையில் சட்ட ஆலோசகரின் தக்க வழிகாட்டுதல் பல நிலைகளில் தேவையானதாகும்.

    உள்ளாட்சி விதிமுறைகள்

    மேலே குறிப்பிடப்பட்ட சான்றுகள் தவிரவும் சம்பந்தப்பட்ட சொத்து அமைந்துள்ள நகராட்சி அல்லது ஊராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட விதிமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது.
    Next Story
    ×