search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்
    X

    கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

    பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். அது நிறைவேறாமல் போகும் போது உடைந்து போகிறாள்.
    பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். ஆனால், கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது புரியும்போது மனம் உடைந்துபோகிறாள்.

    பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் சொல்லும் நியாயமான காரணங்களைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அன்பானவராக, அழகானவராக, அதிக சம்பளம் வாங்குபவராக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருப்பதோடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்யும் நபராக இருக்க வேண்டும். தனக்கென இடமும், நேரமும் ஒதுக்க வேண்டும். தன்னைப் பாராட்டுவதோடு, ரசிக்கவும், வர்ணிக்கவும் வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பதுண்டு.

    இப்படி சர்வ லட்சணமும் பொருந்திய ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ள நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், எல்லா மனிதரிடத்திலும் நிறைகுறைகள் இருக்கும். ஒருவர் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருப்பது சாத்தியமில்லை.



    ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதுபோல காதலரோ, கணவரோ அவரது குறைநிறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். எல்லா மனிதர்களுமே குறைகள் உடையவர் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பார்க்கும் Optimist மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    பெரிய வேலையில் கணவர் இருந்தால், அதற்கேற்றார்போல் அலுவலகத்திலும் அவருக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் ‘என்னைவிட வேலை முக்கியமா’ என்று கேட்பதால், சண்டை சச்சரவுகள்தான் மிச்சமாகும்.

    கணவன், மனைவி இடையே சரியான புரிதல் இருத்தல், தன் இணையரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, பொது இடத்தில் மற்றவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுதல், யார் தவறு செய்தாலும் தனியாக அழைத்து அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்துரைத்தல், இருபாலரும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை புரிந்து நடத்தல் போன்றவற்றைப் பின்பற்றினால், அது மேற்சொன்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்.
    Next Story
    ×