search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தொலைக்காட்சி மீதான பெண்களின் மோகம்
    X

    தொலைக்காட்சி மீதான பெண்களின் மோகம்

    தொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா? அல்லது சந்தோஷங்களை களவாடிவிட்டதா? என்பது குறித்து பார்க்கலாம்.
    தற்போதுள்ள காலகட்டத்தில்  பெண்களுக்கு தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக விளங்குவது தொலைக்காட்சி பெட்டிதான். ஒரு காலத்தில் வசதி படைத்தோர் மட்டும் வைத்திருந்த தொலைக்காட்சி, இன்றைக்கு அனைத்து இல்லங்களிலும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது. கருப்பு-வெள்ளை, கலர் தொலைக்காட்சி, எல்.சி.டி, எல்.இ.டி. என தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது.

    ஒன்று, இரண்டு என அதிகரித்த சேனல்களின் எண்ணிக்கை, அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவால் உள்ளூர் சேனல்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கவில்லை. வெளிநாட்டு சேனல்களும் எக்கச்சக்கமாய் இந்திய எல்லைக்கோட்டுக்குள் நுழைந்தன. ஒவ்வொரு சேனல்களும் மக்களை கவர போட்டிப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. அந்த வகையில், திரைப்படம், தொடர், பாடல், விளையாட்டு, செய்தி, சிரிப்பு-பாட்டு போட்டி நிகழ்ச்சிகள் என விதவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால் பெண்கள் தொலைக்காட்சியில் செலவிடும் நேரமும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன.

    இந்தியர்கள் பெரிய அளவில் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்டனர். தற்போது, தொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா? அல்லது பல இடங்களில் கிடைத்த சந்தோஷங்களை களவாடிவிட்டதா? சந்தோஷத்தை தந்து சோகத்தை பிரசவிக்கிறதா? என்று ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    அன்று தொலைக்காட்சி உட்பட பல பொழுது போக்கு சாதனங்கள் அல்லாத நம் கிராமங்களிலும், வீடுகளிலும் வாசலில் கட்டி இருந்த திண்ணைகளில் உட்காந்து மனம் விட்டு பேசி வந்ததன் மூலம் நம் அண்டை வீட்டாரிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நல்ல உறவுமுறையையும் பேணி காத்து வந்தோம்.

    ஆனால் இன்று தொழில்நுட்ப சாதனங்களின் அணிவகுப்பால் நாம் மெல்ல மெல்ல உறவுகளிடமும், நண்பர்களிடமும் இருந்து தனித்து விடப்பட்டு அந்நியமாகி வருகிறோம்.



    புதுப்புது சேனல்களின் வருகையாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ப அவர்கள் வழங்கும் விதவிதமான நிகழ்ச்சிகளாலும் நம் அனைவரும் அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு மூழ்கி வருவதால், வீடுகளுக்கு உள்ளே உள்ள உறவுகளிடம் கூட நாம் செலவழிக்கும் நேரம் வெகுவாக குறைந்து விட்டது.

    பண்டிகை நாட்களில் கூட உறவுகளோடு அன்பை பறிமாறி கொள்ளாமல் தொலைக்காட்சி பெட்டிகளில் மட்டும் முடங்கி கிடந்து தொலைந்து போகிறோம் என்பதே உண்மை.

    இந்திய தொலைக்காட்சி பொழுது போக்கு சந்தையில், தமிழ்நாட்டினர் தான் அதிகம் வருவாயை ஈட்டி தருபவர்களாகவும், அதிக பார்வையாளர்களைக் கொண்டு தொலைக்காட்சிகளின் முன்னே நாள் முழுவதும் விழுந்து தவம் கிடப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள் என தற்போது வெளிவந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் இன்றைய கால கட்டத்தில் வீடுகளுக்குள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எளிதில் சென்று சேர்ந்து விடக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பதால், தொலைக்காட்சி சேனல்களும் தனக்குள் சில வரம்பு கட்டுப்பாடுகளை கொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தினம் கண்காணித்து வரும் ஒளிப்பரப்பு கண்காணிப்பு குழுவுக்கு உள்ளது.

    எனவே தொலைக்காட்சிகளில் மட்டுமே நாம் சுருண்டு கொண்டோம், என்ற சொல்லுக்கு அடங்கி விடாமல், சுற்றமும் இனிக்க வாழ கற்று கொண்டோம் என்பதை நிதர்சனமாக்குவோம்.
    Next Story
    ×