search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விவாகரத்து: உடலாலும் மனதாலும் ஏற்படுத்துகிற கொடுமை
    X

    விவாகரத்து: உடலாலும் மனதாலும் ஏற்படுத்துகிற கொடுமை

    விவாகரத்தைப் பற்றி இப்படி வேடிக்கையாகச் சொன்னாலும், அதன் பின்னணியில் உள்ள வலியும் வேதனையும் சம்பந்தப்பட்ட இருவரால் மட்டுமே உணரமுடியும்.
    விவாகரத்துக்குக் காரணம் ஆணா, பெண்ணா என்கிற கேள்விக்கு இடமின்றி, இருவரின் பங்கும் சமமாக இருப்பதுதான் நிஜம். ரு தரப்பினருமே இழப்பை சந்திக்கிறார்கள். அதனால் விவாகரத்து என்ற முடிவு அவசியம் தேவை என்று வரும்வரை அதனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது சிறப்பு.  

    விவாகரத்துக்காக இந்திய நீதிமன்றத்தில் பதிவாகும் பெரும்பாலான வழக்குகள் (கிட்டத்தட்ட 70 சதவிகிதம்) இந்தக் காரணத்தின் கீழே தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த வன்கொடுமைக்கு எந்தச் சட்டத்தின் கீழும் விலாவாரியாக விளக்கம் அளிக்கப்படவில்லை. கொடுமை என்பது உடல்ரீதியாக அடித்தல், உதைத்தல், சாட்டை போன்ற பொருளைக் கொண்டு அடிப்பது, கன்னத்தில் அறைவது, குத்துவது, சூடு வைப்பது, துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை அல்லது கொடிய அமிலம் போன்றவற்றின் மூலம் உடலுக்குப் பங்கம் விளைவிப்பது போன்றவை ஆகும்.

    மனதளவிலான கொடுமையின் கீழ் சந்தேகப்படுதல், நச்சரித்தல், கொடுமையான சொற்களால் அவதூறாக, தரக்குறைவாக பேசுவது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடவடிக்கையில் ஈடுபடுவது, சந்தேகப்பட்டு பின் தொடர்வது, மற்றவருடன் இணைத்துப் பேசுவது, வேவு பார்ப்பது, உடல் அழகைக் குறை கூறுவது போன்ற பல நடவடிக்கைகளை கொண்டு வரலாம்.

    சில நேரம் குழந்தைகளும் இவ்வாறான கொடுமைகளுக்கு தப்புவதில்லை. கணவனையோ மனைவியையோ துன்புறுத்த வேண்டுமெனில் குழந்தையின் மீது கொடுமையை பிரயோகிப்பதும் நடைபெறும். அதுபோல திருமணத்துக்கு அடிப்படையாக உடல் உறவையும் நிராகரிப்பது அல்லது தவறான இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவது இவை அனைத்தும் மனரீதியான கொடுமைக்குள் அடங்கும்.

    பெரும்பாலான இந்தியப் பெண்கள் இவ்வாறான உடலாலும் மனதாலும் ஏற்படுகிற கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கவே 2005ம் ஆண்டு ‘வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்’ இயற்றப்பட்டது. இவ்வகையான கொடுமை ஆண்களால் பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்படுவது என்றொரு தவறான அபிப்ராயம் இ ரக்கிறது. சில பெண்களும் தங்கள் கணவர் மீது அத்தகைய கொடுமையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், உலக அளவில் பெண்களே பெரிதும் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
    Next Story
    ×