search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம்
    X

    பெண்களே திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம்

    நீங்கள் எவ்வளவு குறைவான பணத்தை சம்பாதித்தாலும் திட்டமிட்டு அதற்குள் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறும் ரகசியம்.
    நீங்கள் வார சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் நீங்கள் சம்பளம் வாங்கியதும் உங்களது முதல் செலவு கண்டிப்பாக சேமிப்பாக இருக்க வேண்டும். 

    அதன் பிறகு வரவு, செலவு திட்டம் தயார் செய்து, அதன்படி செலவுகளை கையாள வேண்டும். நீங்கள் செய்யும் சிறிய, சிறிய செலவுகளை கூட குறித்து வைத்து கொள்ளவேண்டும்.

    அதை பார்த்து வரும் காலங்களில் தேவையான செலவுகள் எவை, தேவையில்லாத செலவுகள் எவை என கண்டறிந்து செலவை குறைக்கலாம். நமக்கு தேவையான பொருட்களை நாமே நேரில் சென்று, நன்கு விசாரித்து வாங்க வேண்டும். 



    அதேபோல கடைக்கு செல்வதற்கு முன்பாகவே என்னென்ன பொருட்கள் தேவை என்பதை குறிப்பு எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.  முக்கியமாக யாரிடமும் அத்தியாவசிய தேவை இல்லாமல் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. மாத கடைசியில் குறிப்பிட்ட ஒரு தொகையாவது கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். 

    இதையெல்லாம் உங்களால் கடைபிடிக்க முடியாவிட்டால் நீங்கள் வாழும் முறைக்கு தேவையான பணம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

    அல்லது நீங்கள் எவ்வளவு குறைவான பணத்தை சம்பாதித்தாலும் திட்டமிட்டு அதற்குள் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறும் ரகசியம். 
    Next Story
    ×