search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் அழகை கெடுக்கும் நரம்பு நோய்கள்
    X

    பெண்களின் அழகை கெடுக்கும் நரம்பு நோய்கள்

    பெண்களின் முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு வி‌‌ஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முகத்தில் சின்னப் பரு வந்துவிட்டாலே வருத்தப்படுவார்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும் 12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7-வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு எந்த பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம், சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும். இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சினை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக, இந்தப் பிரச்சினை ஏற்படும்போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சினையை சரி செய்துவிட முடியும்.

    பெலெப்ரோபசம் என்பதும் ஒரு நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து, பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்சினை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில் இருக்கும்போதோ தொடர்ச்சியாக இது போல் வரும். தூக்கத்தில் வராது. இதற்கும் மருத்துவம் இருக்கிறது.

    முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிட்டாலும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும் இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்போது கண்கள் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட வாழ்வே பிரச்சினையாகத்தான் இருக்கும். உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே நரம்புகளை பாதிக்கும் வி‌‌ஷயங்களை நாம் தவிர்த்து விட்டாலே இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
    Next Story
    ×