search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் வரும் தொண்டை வலியும், தீர்வும்
    X

    கர்ப்ப காலத்தில் வரும் தொண்டை வலியும், தீர்வும்

    கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. கிருமி தொற்று அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக அல்லது காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தொண்டையில் உண்டாகும் அழற்சியால் தொண்டை வலி உண்டாகிறது. ஒவ்வாமை, தொண்டை தசையில் வலி, சைனஸ், ரசாயனம் அல்லது மாசு போன்றவற்றின் வெளிப்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த தொண்டை வலி ஏற்படலாம்.

    கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக மற்ற பாதிப்புகளான குமட்டல், தலைவலி ஆகியவற்றுடன் இணைந்து தொண்டை வலியும் உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி அடுத்த 7 நாட்களில் தானாக மறைந்து விடும், அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. தொண்டை வலியால் ஒரு சிறு எரிச்சல் மட்டுமே உண்டாகும். வேறு எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது.

    ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு நிமிடம் முழுவதுமாக இந்த ஒரு கப் நீரை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி தொண்டையில் படுமாறு கொப்பளிக்கவும். தினமும் ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்து வருவதால் தொண்டை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    நீராவி உட்செலுத்துதலால் சளி சவ்வுகளில் ஈரப்பதம் அதிகரித்து தொண்டை வலிக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கிறது. இதனால் உங்களால் எளிதில் மூச்சு விட முடிகிறது, மேலும் சௌகரியமாக தூங்க முடியும். இதனால் உடல் எளிதில் குணமாகும்.

    கர்ப்பகாலத்தில் உண்டாகும் அசிடிட்டியைத் தடுக்க இஞ்சி ஒரு சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. அசிடிட்டியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இஞ்சி உதவுகிறது. கர்ப்பகாலத்தின் போது குமட்டல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இஞ்சி ஒரு பாதிப்பில்லாத மற்றும் சாத்தியமான பயனுள்ள மாற்று விருப்பமாக கருதப்படுகிறது.

    தொண்டை வலியால் கர்ப்பகாலத்ல் அவதிப்படும்போது, உங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக பேசுவதைக் குறைத்துக் கொள்ளவும். மேலும், கர்ப்பகாலங்களில் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவுடன் போராட உங்கள் உடல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    ஆகவே உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவ ஓய்வு மிகவும் அவசியம். இதனால் உங்க உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைத்து விரைந்து உடல் குணமாகும். 
    Next Story
    ×