search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது சரியா?
    X

    குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது சரியா?

    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.
    ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள். 

    அவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும். 

    குங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்படியே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக் குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து இருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவை தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன. 

    எனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல!
    Next Story
    ×