search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருக்குழாய் அடைப்பு பிரச்சனைக்கு என்னென்ன சிகிச்சைகள்
    X

    கருக்குழாய் அடைப்பு பிரச்சனைக்கு என்னென்ன சிகிச்சைகள்

    பெண்களுக்கு ஏற்படும் கருக்குழாய் அடைப்பு பிரச்சனைக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கருத்தரிப்பதில் சிக்கலை சந்திக்கிற பெண்கள் இதைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் 20 சதவிகித பெண்களுக்கு காசநோயே கருத்தரிக்காமைக்கு முக்கிய காரணம். இந்நோய் 90 சதவிகிதம் வரை கருக்குழாயை பாதிக்கிறது. காசநோய் பெரும்பாலும் உடலில் மற்ற பகுதியிலிருந்து முக்கியமாக நுரையீரல் பாதிப்பில்இருந்து, நிணநீர் வழியாகவோ அல்லது ரத்த நாளங்கள் வழியாகவோ கருப்பையை அடைகிறது. இப்படி அடையும் இந்நோய் கருக்குழலையே முதலில் பாதிக்கிறது. இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப காலத்திலேயே தெரிவதில்லை. 

    கருத்தரிக்காததற்கான பரிசோதனைகளை செய்யும் போதே தெரியவருகிறது. இந்நோயின் பாதிப்பு இருந்தால் 6098 சதவிகிதம் வரை பெண்கள் கருவுறாமல் அவதிப்படுகிறார்கள். 44 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோய் இரண்டு கருக்குழலையும் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து பிறகு கருத்தரிப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். இப்பெண்களுக்கு கருக்குழாயில் கருவுறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    என்னென்ன சிகிச்சைகள்?

    சிகிச்சை முறைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் சிகிச்சை. மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. இரண்டுமே அனுபவமும் திறமையும் உள்ள மருத்துவர்களால் செய்யப்பட வேண்டியவை. டியூபோபிளாஸ்டி என்கிற சிகிச்சை மைக்ரோஸ்கோப்பிக் மேக்னிஃபிகேஷன் முறையில், மைக்ரோ கருவிகளைக் கொண்டு மிக மிக கவனத்துடன், தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்யப்படும்போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.



    சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி  எனப் பெயர். இப்போது ஃபாலோபோஸ்கோப்பி என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற எண்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள நுண்ணிய மயிரிழைகளான சிலியாவின் இயக்கத்தையும் கண்டறியலாம்.

    ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை  கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

    ஹைட்ரோசால்பிங்ஸ்  எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப் படுகிற லேசர் மைக்ரோ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.

    கார்னுவல் பிளாக் (Cornual block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீன ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் எண்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள்ளே செலுத்தி சரியாக்கலாம்.

    சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம்.  ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.    

    Next Story
    ×