search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10
    X

    பெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10

    புத்தாண்டில் இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
    பெண்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அதை அவர்கள் தங்கள் புத்தாண்டு உறுதி மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்கள்!

    பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்த்துவிடக்கூடாது. அதில் வழக்கமான அரிசி உணவு களுக்குப் பதில் தானியங்களையும், பச்சை காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஒரு கப் பழச்சாறு, வேகவைத்த முட்டை, பால் அல்லது தயிர், சிறிதளவு கொழுப்பு கலந்த உணவு ஆகிய அனைத்தும் காலை உணவில் இடம்பெறவேண்டும். இந்த சரிவிகித சத்துணவை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் சிறிதளவு இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும்.

    வீட்டில் உள்ள ஆண்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்வார்கள். அதை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல், அவர்களும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் நெகிழ்ச்சியாகும். எலும்புகளும் வலுவாகும். நாள் முழுக்க உற்சாகம் கிடைக்கும்.

    தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகவேண்டும். இது ரத்தத்தை சுத்தி செய்து, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். சரும அழகிற்கும் தண்ணீர் பருகவேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகினால் சிறுநீர் பாதை தொற்றும் ஏற்படாது.

    பெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு ஒரு கப் பால் பருகுங்கள். டாக்டர் அனுமதியோடு தினமும் ஒரு கால்சியம் மாத்திரை சாப்பிடலாம். பால் மற்றும் பால் வகை பொருட்களில் இருக்கும் கால்சியம் மட்டும் போதாது, காய்கறிகளில் இருக்கும் கால்சியமும் உடலுக்கு தேவை. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



    ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறைந்தால் மன அழுத்தம் தோன்றும். எளிதாக ஜீரணமாகக் கூடிய பிஸ்கெட், சாக்லேட் போன்றவைகளை உடனடியாக சாப்பிடும் விதத்தில் வைத்திருப்பது நல்லது. வைட்டமின் சி சத்து தினமும் உடலுக்கு தேவைப்படுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களிலும், காய்கறிகளிலும் இந்த சத்து இருக்கிறது.

    உப்பு, இனிப்பு இந்த இரண்டையும் முடிந்த அளவு பெண்கள் உணவில் இருந்து அப்புறப் படுத்திவிடவேண்டும்.

    சோர்வு, தலைசுற்றுதல், தலைவலி, தளர்ச்சி போன்றவை இருந்தால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ரத்த சோகையால் முடியும் உதிரும். அவர்கள் ஈரல், கீரை வகைகள், நெல்லிக்காய், திராட்சை போன்றவைகளை அதிகம் சாப்பிடவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இரும்பு சத்து மாத்திரைகளும் சாப்பிடலாம்.

    உடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம். தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும். பிரஷ் பழையதாகிவிட்டால் மாற்றிவிடவேண்டும். பற்களின் ஆரோக்கியத்திற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் நல்லது.

    கொழுப்பு என்றாலே பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அவசியமாகிறது. நமது மூளையின் 60 சதவீதத்தை கொழுப்பு திசுக்கள்தான் நிர்மாணிக்கிறது. அதனால் வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பு கொண்ட பொருட்களை மட்டும் தவிர்த்திடுங்கள்.

    உடல் மெலிய வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறுக்குவழி எதையும் கடைப்பிடிக்கக்கூடாது. அது உடல் மெட்டோபாலிக் சிஸ்டத்தை பாதிக்கும். ஜீரணத்தில் கடுமையான சிக்கலை தோற்றுவிக்கும்.
    Next Story
    ×