search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சனைகள்
    X

    பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சனைகள்

    பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.
    நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

    உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்குக் காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன, ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாகக் கருதப்படுகின்றன, அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவதில்லை.

    உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாகத் தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும்.

    மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அடையாளங்களாகும்.

    இந்த அறிகுறிகளில் ஒன்றோ, சிலவோ இரண்டு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும். 
    Next Story
    ×