search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய்
    X

    இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய்

    இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகை எண்ணெயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

    இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
    சீரகம் : 1 ஸ்பூன்
    சோம்பு : 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் : 3
    கறிவேப்பிலை : 2 இணுக்கு
    கொத்தமல்லி : சிறிதளவு
    நெல்லி வற்றல் : 10 கிராம்
    வெட்டிவேர் : 5 கிராம்

    மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக இளநரை மறைவதை காணலாம். இந்த எண்ணெயை இரும்பு சட்டியில் தான் காய்ச்ச வேண்டும்.

    உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
    Next Story
    ×