search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிளிசரின்
    X

    சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிளிசரின்

    முகம், உதடு வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்று பார்க்கலாம்.
    கிளிசரின் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது.
    கிளிசரின்

    கிளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதால் முகம் மிருதுவாக மாறி, எல்லா நேரத்திலும் பளபளப்பாக ஜொலிக்கும். கடுமையான வெயில் காலங்களிலும், நடுங்கும் குளிர் காலங்களிலும் இது நல்ல பலனைத் தருகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

    சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது. உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இழந்து காணப்பட்டால், கிளிசரின் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம்.

    சரும அணுக்களில் உள்ள புரதங்களை உடைத்து அவற்றை சருமத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது கிளிசரின். இதனால் புதிய சரும அணுக்கள் உற்பத்தி அதிகரித்து, தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் திரும்பக் கிடைக்கிறது.

    50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

    இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் நல்ல விளைவுகளை விரைவில் காணலாம்.
    Next Story
    ×