search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்திற்கு பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க
    X

    சருமத்திற்கு பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க

    பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன.
    பால் பவுடர் உங்களுடைய சருமத்தைக் கலராக்குவதற்கு மிகச் சிறந்த ஒரு மேஜிக்கல் பொருள். பொதுவாக சருமத்தை சுத்தம் செய்யவும் அழகைக் கூட்டவும் கிளன்சிங்குக்காக பாலை பயன்படுத்துவோம். பால் பவுடர் எப்படி உங்களுடைய சருமத்தில் அந்த அதிசயத்தை உண்டாக்கப் போகிறது என்பதைப் பற்றி கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

    பால் பவுடரை வெறுமனே அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய சருமத்தின் நிறத்தை கூட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி சில குறிப்பிட்ட பொருள்களுடன் பால் பவுடரைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அவை என்னென்ன என்று விரிவாகப் பார்க்கவாம்.

    * எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

    தேவையான பொருள்கள் :

    பால் பவுடர் - ஒரு ஸ்பூன்
    எலுமிச்சை சாறு (ஃபிரஷ்) - 2 ஸ்பூன்

    பயன்படுத்தும் முறை :

    ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.



    * தேவையான பொருள்கள்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்
    ரோஸ்வாட்டர் - சில துளிகள்

    பயன்படுத்தும் முறை

    மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.

    * தேவையான பொருள்கள்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது
    எலுமிச்சை சாறு - சில துளிகள்

    பயன்படுத்தும் முறை

    ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

    Next Story
    ×