search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டு நூல் புடவைக்கு மட்டும் தானா?
    X

    பட்டு நூல் புடவைக்கு மட்டும் தானா?

    பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பெண்களின் பட்டுப்புடவைகளின் நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.
    காஞ்சிப்பட்டு முதல் பனாரஸ் பட்டு வரையில் பட்டு என்றாலே புடவைதான் நினைவிற்கு வரும். ஆனால் பட்டு நூலில் கண்ணை கவர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் நகைகள் பிரமிப்பூட்டுபவை. பெண்கள் தாங்கள் அணியும் பட்டுபுடவைக்கு ஏற்ப நகை அணிய விரும்பும் போது தங்க நகையையே விரும்புவர். ஆனால் தங்க நகைகளில் புடவைக்கு ஏற்ற நிறங்களில் அணிவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    பல வண்ண கற்கள் பதித்த கவரிங் நகைகள் போட்டாலும் அவை விலையுயர்ந்த பட்டுப்புடவைக்கு ஜோடியாவது சற்று சிரமம் தான். ஆனால் பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பட்டுப்புடவைகளின் அதே நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.

    பட்டு நூல் நகைகளின் வரலாறு :

    பட்டு நூல் நகைகள் வட இந்திய பகுதிகளில் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. பெரு நாட்டில் பட்டு நூல் நகைகள் அதிகம் பிரசித்தம். அதே வகை நகைகள் கொடைகானலில் உள்ள பழங்குடி பெண்கள் செய்து விற்று வந்தனர். ஆனால் தற்போது இளம் பெண்கள் விரும்பி அணிவதால் இந்நகைகள் பல இணையதள கடைகளில் விற்கப்படுகின்றன.

    புதிய டிசைன்கள் புராதனம் இணைந்து...

    பொதுவாக நகைகளில் பாரம்பரியத்தன்மை கொண்டவை ஆன்ட்டிக் வகைகள், சிறு ஆன்ட்டிக் மணிகள், ஆன்ட்டிக் தொங்கட்டான், ஜிமிக்கி, பென்டன்ட் போன்றவைகளை பயன்படுத்தி செய்யப்படும் பெரிய நெக்லஸ், ஜிமிக்கி, கழுத்தணிகள், வளையல்கள் போன்றவை மிகவும் கம்பீரமாக இருக்கும். இவற்றின் இடையே பட்டு நூல் சுற்றிய மணிகள் மிகவும் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

    வெள்ளை நிற கற்கள், முத்துக்கள், மணிகள் போன்றவைகளும் இந்த நகைகளில் செய்யப்படும் நகைகள் தூரத்தில் பார்த்தால் தங்க நகைகள் போலவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக பட்டுப்புடவையின் நிறங்கள் தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றிற்கான ப்ளவுஸ் துண்டை எடுக்கும் போது அதே நிறங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஆனால் பட்டு நூலுனால் செய்யப்படும் நகைகள் புடவையின் நிறத்திற்கு வாந்தமாக பொருந்தி விடுகிறது.

    பொடி முத்துக்கள் கொத்து கொத்தாக கோர்க்கப்பட்டு செயின் இடையேவும், இம்முத்துக்களால் ஆன காது வளையின் கீழ்புறம் தொங்கும் ஜிமிக்கியிலும், இதே முத்தக்கள் கொண்ட வளையல்களின் இடைஅயவும் பட்டு நூலினால் சுற்றப்பட்ட மணிகள் போர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் மிகவும் அழகாகவும் பட்டு புடவைகள் மட்டுமின்றி சுடிதார், ஜீன்ஸ், குர்தாவிற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. மிகவும் எடை குறைவாகவும், பெரிய அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கும் இந்த நகைகள் இளம் பெண்களின் மனம் கவர்ந்த நகையாக இருக்கும்.

    Next Story
    ×