search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை வழிகள்
    X

    முகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை வழிகள்

    முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இயற்கையான சில வழிகள் உள்ளன.
    முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இதோ இயற்கையான சில வழிகள்.

    தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.

    அதேபோன்று, தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

    தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கைக்குச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

    முகத்தின் அழகுக்கு உருளைக்கிழங்கும் நல்ல மருத்துவம் தரும். உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
    Next Story
    ×