search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளம் வயதில் கண்களுக்கு கீழ் சுருக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வும்
    X

    இளம் வயதில் கண்களுக்கு கீழ் சுருக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வும்

    இளம் வயதிலேயே கண்களுக்கு கீழ் சுருக்கம் எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    இளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

    காரணங்கள் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வர வயது மட்டுமே ஒரு காரணமாக இருக்காது. சூரிய ஒளி, சிரிப்பது, புகைப்பிடித்தல், முகப்பருக்கள், தசை அசைவுகள், ஆப்ரேசன், காயங்கள் ஆகியவைகள் இந்த சுருக்கங்களுக்கு காரணமாகிறது. நீங்கள் அதிக நேரங்கள் ஒரு புறமாக மட்டுமே தூங்குவதாலும், ஒரு புறமாக மட்டுமே தலையணையை வைத்து அழுத்தம் தருவதாலும் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

    வீட்டு வைத்தியம் அண்டர் ஐ க்ரீம்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. தினமும் சோப்பு அல்லாத மாஸ்சுரைசர்களை தினமும் இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு கீழ் சுருக்கங்களை போக்கலாம். அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று க்ரீம்களை பயன்படுத்துங்கள்



    நவீன மருத்துவ முறை நவீன மருத்துவத்தில் புதிய தோல்களை வளர செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை போக்கலாம். மருத்துவர் பாலீஷ்ங் டூல் உபயோகித்து கண்களுக்கு கீழ் இருக்கும் சுருக்கங்களையும் இறந்த செல்களையும் நீங்குவார்கள்.

    வராமல் தடுப்பது எப்படி?


    கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் தடுக்க அதிகமான சூரிய ஒளியில் இருப்பதை தடுக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து செல்வது பாதுக்காப்பானது. ஆல்பா ஹைட்ராக்சி அடங்கியுள்ள ஆண்டி விங்கிள் க்ரீம் சூரியனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது.

    குறிப்பு ஆண்டி விங்கிள் க்ரீம்கள் அனைத்தும் சுருக்கங்களுக்கு நல்ல பலனை தராது. எனவே க்ரீம்களை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. தோல் மருத்துவரின் ஆலோசனையுடன் க்ரீம்களை பயன்படுத்துவது சிறந்தது.
    Next Story
    ×