search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்
    X

    உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

    பெண்கள் தங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.  தலை முதல் கால் வரை அழகாக்கும் இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம்.

    1. நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

    2. கடலை மாவு : முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இது ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

    3. மஞ்சள் : இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

    4. குங்குமப்பூ : இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.



    5. ரோஸ் வாட்டர் : புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.

    6. சந்தனம் : சந்தனம் அழகுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.

    7. சீகைக்காய் : இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.

    8. தயிர் : இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும்.
    Next Story
    ×