search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விரல் நுனியில் தோல் உரிந்து கொண்டே இருக்கின்றதா?
    X

    விரல் நுனியில் தோல் உரிந்து கொண்டே இருக்கின்றதா?

    வறண்ட சருமம், கிருமி பாதிப்பு, அரிப்பு இவை பொதுவாக விரல் நுனிகளில் தோல் உரிவதற்கான காரணங்கள் ஆகும். இதற்கான தீர்வை பார்க்கலாம்.
    சிலருக்கு விரல்களின் நுனியில் தோல் உரியும். சற்றே வெடித்தார்போல் இருக்கும். இது அநேகருக்கு இருக்கும் பாதிப்புதான். கை, கால், உதடு இவற்றில் தோல் உரிவதுண்டு.

    பொதுவில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. என்றாலும் சில சமயங்களில் உடல் ஆரோக்கிய பிரச்சினையோடு தொடர்பு உடையதாக இருக்கலாம்.

    வறண்ட சருமம், கிருமி பாதிப்பு, அரிப்பு இவை பொதுவாக விரல் நுனிகளில் தோல் உரிவதற்கான பாதிப்பு.

    சூழ்நிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    * சிலர் வேலை காரணமாகவோ, பழக்கம் காரணமாகவோ கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நீரில் கழுவுவர். இது சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை நீக்கி விடுவதால் சருமம் வறண்டு உரியலாம்.

    இவர்கள் அடிக்கடி மாஸ்ட்ரைஸர் கைகளில் தடவி வந்தால் இப்பாதிப்பினை தவிர்த்து விடலாம்.

    * வறண்ட தட்ப-வெப்ப நிலை. பொதுவாக இது வறண்ட காலம், குளிர் காலத்தில் ஏற்படும். இந்த காலத்தில் சருமம் சுருங்கும். வறண்டு போகும். சரும தோல் உரியலாம். இக்காலங்களில் கையுறை அணிவது நல்ல பாதுகாப்பு தரும்.

    * அதிக சூரிய வெப்பம் சருமத்தினை எரித்து விடும். சிவந்த, பாதிப்புடைய சருமம், புண், தோல் உரிதல் ஆகியவை ஏற்படும். இத்தகு பாதிப்புகள் ஒரு வாரத்திற்குள் சரியாகவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை வேண்டும். பொதுவாக இத்தகு சருமம் வெயிலில் செல்பவர்கள் ‘ஸன் ஸ்கிரீன்’ லோ‌ஷன் பயன்படுத்துவது நல்லது. ‘அலோவேரா’ லோ‌ஷன் எனப்படும் சோற்று கற்றாழை லோ‌ஷன் உபயோகிப்பதும் மிகவும் நல்லது.



    * சிறு பிள்ளைகள் சதா (எப்போதும்) வாயில் விரல் போட்டே இருப்பார்கள். பெரியவர்கள் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இத்தகையோருக்கு கண்டிப்பாய் விரல் நுனிகளில் சரும பாதிப்பு ஏற்படும்.

    * ரசாயனங்கள்: தரமான சோப், சுகாதாரப் பொருட்கள் இவை கை விரல்களில் வறட்சி, எரிச்சல், தோல் உரிதல் ஆகியவை ஏற்படும்.

    * கை எக்ஸிமா: இது பரம்பரை காரணமாகவும் வரலாம். மேலும் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அலர்ஜி காரணமாக ஏற்படலாம்.

    இவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம்.

    * சிலருக்கு கோடை காலத்தில் கைகளில் கொப்பளங்கள். சிவப்பு திட்டு, தோல் உரிதல் ஆகியவை ஏற்படலாம்.

    * சோரியாஸிஸ் எனப்படும் சரும பாதிப்பு முட்டி, முழங்கை, தலை, கீழ் முதுகு, விரல் துளிகளில் ஏற்படலாம். இது பிறருக்கு பரவாது. ஆனால் இவர்களுக்கு அவ்வப்போது அதிக பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இன்று மருத்துவத்தில் இதற்கு மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் கண்டுள்ளது.

    * சிலருக்கு சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்தலாம்.

    * பொதுவில் இத்தகு பாதிப்புகள் அதாவது சாதாரண சரும பாதிப்புகள் கூட மருத்துவ உதவி எடுத்துக் கொள்வது அவசியம்.

    * கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது.

    * மென்மையான சோப் பயன்படுத்துவது.

    * வேலை செய்யும் பொழுது-பெண்கள் பாத்திரம் தேய்க்கும் பொழுது, துணி தோய்க்கும் பொழுது கையுறைகளை அணிந்து கொள்வது நல்லது.

    * தண்ணீரில் கைகளை கழுவிய பிறகு மாஸ்ட்ரைஸர் தடவிக் கொள்வது நல்லது.
    Next Story
    ×