search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஸ்ட்ரெய்ட்னிங், கலரிங் செய்யும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை
    X

    ஸ்ட்ரெய்ட்னிங், கலரிங் செய்யும் போது கவனத்தில் கொள்ளவேண்டிவை

    பெண்கள் தங்களது கூந்தலுக்கு ஸ்ட்ரெய்ட்னிங், கலரிங் செய்த பின்னர் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அவை கூந்தலை பாதுகாக்கும்.
    ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்வது இந்த காலத்து ஃபேஷனாக உள்ளது. இதன் மூலம் முடிகளில் உள்ள வளைவுகளை நேராக்கலாம். அதன் பிறகு கலரிங் செய்யலாம். பார்க்க அழகாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் போல் எல்லா நிறத்திலும் கலரிங் செய்ய முடியாது. நம்ம சரும நிறம் மற்றும் முக அமைப்புக்கு ஏற்ப தான் கலரிங் செய்ய வேண்டும்.

    பிரவுன், பிரவுன் சார்ந்த நிறங்கள், சிவப்புலேயே அடர்ந்த நிறம், தேன் போன்ற நிறங்களில் கலரிங் செய்தால் பார்க்க அழகாக இருக்கும். சருமத்திற்கு ஏற்ப மட்டும் இல்லை முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்வது அவசியம். வட்ட வடிவ முகத்துக்கு சுருள் சுருளான முடிகள் பார்க்க அழகாக இருக்கும். சதுர முகத்திற்கு காது பக்கம் முடிகள் விழுறா மாதிரி இருக்க வேண்டும். இதய வடிவ முகத்துக்கு தோள்பட்டை வரை முடி இருக்கலாம். மொத்தத்தில் கலரிங் செய்யும் போது ஒருவருடைய சரும நிறம், முடியின் அமைப்பு மற்றும் நிறம் பார்த்து கலரிங் செய்ய வேண்டும்.

    ஸ்ட்ரெய்ட்னிங் மற்றும் கலரிங் செய்யும் போது அனுபவம் உள்ள நிபுணர்களிடம் செய்வது நல்லது. அதேபோல் நல்ல தரமான பிரபலமான அழகு நிலையத்தில் சென்று செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதால் முடி கொட்டும் வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப முடியினை பராமரிக்க வேண்டும். ஸ்ட்ரெய்ட்னிங் மற்றும் கலரிங் செய்யும் போது அதற்கான சிறப்பு பராமரிப்பு அவசியம். அதை நிபுணர்களின் ஆலோசனைப் படிபின்பற்ற வேண்டும். இல்லை என்றால் முடி வலுவிழந்து காணப்படும்.



    கலரிங் செய்த பிறகு 72 மணி நேரம் வரை தலைக்கு ஷாம்பூ போடக்கூடாது. அப்போது தான் நிறம் முடியில் தங்கும். சல்பேட் அல்லாத ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். இது எல்லா ஷாம்பூக்களிலும் இருக்கும். இது ஷாம்புவில் நுரையை ஏற்படுத்தும். இந்த ரசாயணம் உள்ள ஷாம்பூவை பயன்
    படுத்தினால் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய் பசை மற்றும் ஈரத்தன்மையை அகற்றுவதால், கலரிங் முடியில் தங்காது.

    அதேபோல் கலரிங் செய்து இருக்கும் போது சூடான தண்ணீரில் குளிக்க கூடாது. மிதமான சூடு இருந்தால் போதும். வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் தலைக் குளிக்க கூடாது. எப்போதும் தலைக் குளித்த பிறகு கண்டிஷ்னர் பயன்படுத்துவதை அவசியமாக கொள்ள வேண்டும். அவ்வப்போது தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையை மசாஜ் செய்வது நல்லது.

    இது முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். வாரம் ஒரு முறை அவாக்காடோ பழம், முட்டை மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய்யை கலந்து முடியில் தடவி காய்ந்ததும் ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.கலரிங் செய்த பிறகு அதில் ஆல்கஹால் அடங்கிய அழகு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. ஹேர் டிரையர் கொண்டும் முடியை காயவைக்கூடாது.

    இதன் மூலம் கலரிங் நிறம் மங்கி போகும் வாய்ப்புள்ளது. அதேபோல் மருத்துவ குணம் கொண்ட ஷாம்பூக்களையும் (பொடுகு சம்மந்தப்பட்ட ஷாம்பூக்கள்) பயன்படுத்தக்கூடாது. வெளியே செல்லும் போது நேரடியாக வெயிலில் முடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் முடியினை துப்பட்டாவால் கட்டிக் கொள்ளலாம்
    Next Story
    ×