search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரும சுருக்கத்தை போக்கும் திராட்சை பேஷியல்
    X

    சரும சுருக்கத்தை போக்கும் திராட்சை பேஷியல்

    திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி சரும தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது. சரும சுருக்கத்தை போக்க திராட்சை பேஷியல் நல்ல பலனை தரும்.
    திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது.

    இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டு 20 நிமடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.

    சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. திராட்சை எண்ணெய் பசையுள்ள சருமத்தினருக்கு மிகவும் நல்லது.

    கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.

    திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் உங்கள் சருமம் மிருதுவாகும்.
    Next Story
    ×