search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான பால் போளி
    X

    சுவையான பால் போளி

    குழந்தைகளுக்கு போளி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவையான போல் போளியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1/2 கப்
    ரவை - 1/2 டீஸ்பூன்
    நெய் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை
    தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
    எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப

    பால் செய்வதற்கு

    பால் - 1/2 லிட்டர்
    சர்க்கரை - 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    கற்பூரம் - ஒரு சிட்டிகை
    பாதாம், முந்திரி - கை அளவு
    குங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால்)



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

    பின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும்.

    அந்த பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    ஊற வைத்த மாவை குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள்.

    அதை எண்ணெயில் போட்டு பூரி போல் சூட்டு கொள்ளவும்.

    இந்த பூரியை காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும்.

    இறுதியாக பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும்.

    சுவையான பால் போளி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×