search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி?
    X

    மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி?

    தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,
    சின்ன வெங்காயம் - 10,
    அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் - 2 கப்,
    தேங்காய் பால் - 1 கப்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உளுந்து - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.

    2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்.

    கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

    கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன் இறக்கவும்.

    சூப்பரான மணத்தக்காளிக்கீரை மண்டி

    குறிப்பு - இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×