search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி
    X

    உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி

    சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    தக்காளி - 1
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - சிறிதளவு
    பட்டை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    குடைமிளகாய், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக்கவும்.

    தக்காளி, பூண்டு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுதை கொட்டி கிளறவும்.

    அடுத்து குடைமிளகாய், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×