search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான கருணைக் கிழங்கு மசியல்
    X

    அருமையான கருணைக் கிழங்கு மசியல்

    பிடி கருணைக் கிழங்கில் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த கிழங்கில் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிடி கருணைக் கிழங்கு - 200 கிராம்
    புளி - எலுமிச்சை அளவு
    பச்சை மிளகாய் - 5
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - தாளிக்க
    கறிவேப்பிலை, வெல்லம் - சிறிதளவு



    செய்முறை :

    கருணைக் கிழங்கை அவித்துத் தோல் உரித்து மசித்து வைத்துக்கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்க வேண்டும்.

    பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி வேகவிடுங்கள்.

    பின் மசித்த கிழங்கைப் போட்டு சிறிது நேரம் கழித்து வெல்லம் போட்டுக் கிளறி இறக்க வேண்டும்.

    சாம்பார் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

    சூப்பரான கருணைக் கிழங்கு மசியல் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×