search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது பேல் பூரி. இன்று இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசிப் பொரி - 3 கப்,
    கேரட் - 2,
    வெங்காயம், தக்காளி - 3,
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, - தலா கால் கப்,
    உருளைக்கிழங்கு - 2
    சாட் மசாலா - கால் டீஸ்பூன்.

    கார சட்னிக்கு:

    கொத்தமல்லி, புதினா - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.

    ஸ்வீட் சட்னிக்கு:

    புளி - 50 கிராம்,
    வெல்லம் - கால் கப்,
    பேரீச்சம்பழம் - சிறிதளவு,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்… கார சட்னி தயார்.

    வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து… மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்… ஸ்வீட் சட்னி ரெடி.

    வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து… அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான பேல் பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×