search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் வெஜிடபுள் பணியாரம்
    X

    சத்தான டிபன் வெஜிடபுள் பணியாரம்

    இந்த வெஜிடபுள் பணியாரத்தை டிபனாகவும் சாப்பிடலாம், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சுவைக்கலாம். இன்று பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கிலோ
    உளுந்து - 1/4 கிலோ
    கேரட் - 1 கப்
    தேங்காய் - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    முட்டைக்கோஸ் - 1 கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 கப் (சிறியதாக கட் செய்தது)

    தாளிதம் :

    கடுகு, உளுந்தப்பருப்பு, எண்ணெய்.



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மறுநாள் காலை கேரட், முட்டைக்கோஸ், தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவு கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபுள் பணியாரம் ரெடி.

    அதனை தேங்காய் சட்னி, புதினா சட்டியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×