search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி
    X

    சப்பாத்திக்கு அருமையான கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி

    நாண், புலாவ், தோசை, சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காலிஃபிளவர் - 1 பூ
    பட்டாணி - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    கடுகு - தேவையான அளவு

    பொடி செய்ய தேவையான பொருட்கள்:

    கடலை பருப்பு - 100 கிராம்
    உளுந்தம் பருப்பு - 100 கிராம்
    தனியா (மல்லி) - 150 கிராம்
    சீரகம் - 150 கிராம்
    வர மிளகாய் - தேவையான அளவு
    பட்டை - 25 கிராம்
    இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்
    ஏலக்காய் - சிறிதளவு



    செய்முறை :

    பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    காலிஃபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணி போட்டு வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

    காய்கள் வெந்தவுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி.

    இந்த சப்ஜியை சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×