search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் அக்கி ரொட்டி
    X

    மாலை நேர டிபன் அக்கி ரொட்டி

    கர்நாடகாவில் இந்த அக்கி ரொட்டி மிகவும் பிரபலம். அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்வதால் சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×