search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சில்லி சோயா செய்வது எப்படி?
    X

    சில்லி சோயா செய்வது எப்படி?

    சில்லி சோயாவை புலாவ், தயிர், சம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :      

    சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 30,   
    தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்,   
    இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,   
    சோள மாவு - 3 டீஸ்பூன்,   
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   
    தக்காளி, குடைமிளகாய் - தலா ஒன்று,   
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,   
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :     

    தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி தண்ணீரை வடித்து விட்டு உருண்டைகளை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    இந்த சோயா உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தக்காளி விழுது, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சோள மாவு, உப்பு சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும, பிசிறி வைத்த சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான சில்லி சோயா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×