search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம்
    X

    சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம்

    வெறும் புதினா சாதம் செய்யாமல் அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்து சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்,
    கொண்டைக்கடலை - ½ கப்,
    தக்காளி - 1
    வெங்காயம் - 1,
    பிரிஞ்சி இலை - 1,
    ப.மிளகாய் - 5
    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,
    தனியா தூள் - கால் டீஸ்பூன்,
    புதினா இலைகள் - 1 கைப்பிடி,
    எலுமிச்சைச் சாறு - ½ டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கொண்டைக்கடலை, அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.

    அரிசி அரை வேக்காடு வெந்தவுடன் அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும்.

    கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புதினா சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×