search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்
    X

    ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்

    கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - ஒரு கப்
    முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க:

    தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
    சீரகம் - கால் தேக்கரண்டி



    செய்முறை :

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கீரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

    வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×