search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் தோசை
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் தோசை

    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸை பயன்படுத்தி சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    குடைமிளகாய் - பாதி
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    ப.மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சீஸ் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    தோசையின் மேல் வெங்காயம், கேரட், குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பரவலாக தூவி அதன் மேல் தக்காளி சாஸை ஊற்றவும்.

    சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி கரண்டியால் காய்கறிகளை நன்றாக பரப்பி விட்டு மூடி வைத்து வேக விடவும்.

    கடைசியாக துருவிய சீஸை தூவி 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×