search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கிராமத்து மீன் குழம்பு
    X

    சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

    மீன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வறுத்து அரைத்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ (எந்த மீனாகவும் இருக்கலாம்)
    கடுகு - 1 டீஸ்பூன்.
    சின்ன வெங்காயம் - 10.
    தக்காளி - 1.
    கறிவேப்பிலை - சிறிது .
    புளி - (ஒரு சிறிய எலுமிச்சை அளவு).
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - தேவைக்கு.

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1 கப்.
    சின்ன வெங்காயம் - 10.

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10.
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்.
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மியில், தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

    குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    சூப்பரான சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×