search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இட்லிக்கு அருமையான மிளகு காரச் சட்னி
    X

    இட்லிக்கு அருமையான மிளகு காரச் சட்னி

    இட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 5 (பெரியது)
    காய்ந்த மிளகாய் - 5
    மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
    பெருங்காயம் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து கொள்ளவும்.

    அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

    அடுப்பை அணைத்து விட்டு வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும்.

    வதங்கியவற்றை ஆறவைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதம கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து இறக்கவும்.

    சுவையான மிளகு கார சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×