search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாளித்த கொழுக்கட்டை செய்வது எப்படி
    X

    தாளித்த கொழுக்கட்டை செய்வது எப்படி

    காலை, மாலை நேர உணவாக இந்த தாளித்த கொழுக்கட்டையை சாப்பிடலாம். இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 2 கப்
    தேங்காய் - அரை மூடி
    காய்ந்த மிளகாய் - 6
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுந்து - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    இட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

    வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டி அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் கிளறி இறக்குங்கள்.

    மாவை சற்று ஆறியதும் மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    சூப்பரான தாளித்த கொழுக்கட்டை ரெடி.

    இதற்கு தொட்டுகொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×