search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குஜராத்தி ஸ்பெஷல் தால் டோக்ளி
    X

    குஜராத்தி ஸ்பெஷல் தால் டோக்ளி

    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள இந்த தால் டோக்ளி அருமையாக இருக்கும். இன்று தால் டோக்ளியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    பாசிப் பருப்பு - அரை கப்,
    தக்காளி - 2,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    பட்டை - சிறு துண்டு,
    உப்பு - தேவையான அளவு,
    ஓமம் - 1 டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள்.

    கோதுமை மாவு, உப்பு, ஓமம் ஆகியவற்றைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடிவையுங்கள். பிறகு, அந்த மாவைச் சப்பாத்தியாகத் திரட்டி கத்தியால் இரண்டு அங்குல துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது வெட்டி வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும். அவை வெந்து மேலே வரும் போது தண்ணீரை வடித்து தனியாக வைத்து கொள்ளவும். இப்போது டோக்ளி துண்டுகள் தயார்.

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி [பாட்டி மசாலா] மஞ்சள் தூள்
    சேர்த்துக் குழைய வேகவைத்து கொள்ளுங்கள்.

    அரைத்த கலவையுடன் உப்பு, [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், வெந்த பாசிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் டோக்ளி துண்டுகளைச் சேர்த்து அடுப்பை 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தால் டோக்ளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×