search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தயிர் சாதத்திற்கு அருமையான வெண்டைக்காய் வறுவல்
    X

    தயிர் சாதத்திற்கு அருமையான வெண்டைக்காய் வறுவல்

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் வெண்டைக்காய் வறுவல். இன்று இந்த வெண்டைக்காய் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 1/2 கிலோ
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :
     
    வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் [பாட்டி மசாலா] கரம் மசாலா, அரிசி மாவு, [பாட்டி மசாலா] மல்லித் தூள், சோள மாவு, [பாட்டி மசாலா] மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
     
    இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான வெண்டைக்காய் வறுவல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×