search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் புலாவ்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் புலாவ்

    காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையில் காய்கறிகளை சேர்த்து புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி - அனைத்தும் சேர்த்து 1 கப்,
    தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    அரைக்க...

    கொத்தமல்லித்தழை - 1 கப்,
    தக்காளி - 1,
    பச்சைமிளகாய் - 3,
    புதினா - 1/2 கப்.



    செய்முறை :

    தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுது, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தயிர், உப்பு, பாஸ்மதி அரிசியை போட்டு வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விசில் போட்டு 20 நிமிடம் வேகவிடவும்.

    விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து நெய் சிறிது ஊற்றி ஒரு கிளறு கிளறி எடுத்து சூடாக பரிமாறவும்.
     
    சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×