search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் பனிவரகு கருப்பட்டி பணியாரம்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் பனிவரகு கருப்பட்டி பணியாரம்

    கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று பனிவரகு அரிசி, கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பனிவரகு - ஒரு கப்
    பொடி செய்த கருப்பட்டி - முக்கால் கப்
    தேங்காய் துண்டுகள் - 1 கப்
    ஏலக்காய் - 5



    செய்முறை :

    அரை கப் தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    பனிவரகு அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் அரை கப் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி அரைத்த மாவில் ஊற்றி, அதனுடன் ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்த நன்றாக கலந்து கொள்ளவும்.

    பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பனிவரகு கருப்பட்டி பணியாரம் தயார்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பனிவரகு கருப்பட்டி பணியாரம் ரெடி.

    பனிவரகு அரிசியில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசி உண்டாக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×