search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டைக்கோஸ் பக்கோடா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டைக்கோஸ் பக்கோடா

    வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைக்கோஸ் - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - 2
    பச்சைமிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    பூண்டு - 2 பல்
    கடலை மாவு - ஒரு கப்
    அரிசி மாவு - ஒரு கைப்பிடி
    சோடா உப்பு - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டைக்கோஸ், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள்
    , கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.

    சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.

    மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×