search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு வடை
    X

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு வடை

    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 2 கப்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
    கறிவேப்பில்லை - 2 கொத்து
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வேர்க்கடலையை சிறிய துண்டுகளாக பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கி வெங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை, உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதனுடன்
    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மாவு பதம் சப்பாத்தி மாவு பதத்தை விட லூசாக இருக்க வேண்டும்.

    கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிறிது சிறிது மாவாக எடுத்து கையில் தட்டி(வடை தட்டுவது போல), எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

    வடை பொரிந்தவுடன் எடுத்து விடலாம் அல்லது வடையில் போட்டிருக்கும் வேர்க்கடலை லேசாக சிவந்தவுடன் எடுத்து விடலாம்.

    சூப்பரான கேழ்வரகு வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×