search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான ஆலு - பன்னீர் புலாவ்
    X

    அருமையான ஆலு - பன்னீர் புலாவ்

    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து புலாவ் செய்வதால் அருமையாக இருக்கும். இன்று இந்த புலாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
    பன்னீர் - 10 துண்டுகள்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
    உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    சாட் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை - சிறிது, கிராம்பு - 2,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    பிரிஞ்சி இலை - 1,
    நெய் - 1 டீஸ்பூன்,
    தக்காளி - 2,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சைமிளகாய் - 2,
    அலங்கரிக்க வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிது.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, வெறும் கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், நறுக்கிய உருளைக்கிழங்கை பொரித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, சோம்பு போட்டு தாளித்த பின் அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து கிளறி மிதமான தனலில் வைக்கவும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது பொரித்த பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்.

    பின்பு இதில் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

    கடைசியாக முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×