search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாப்பாத்திக்கு அருமையான பாலக் கோப்தா
    X

    சாப்பாத்திக்கு அருமையான பாலக் கோப்தா

    சாப்பாதி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பாலக் கோப்தா. இன்று இந்த பாலக் கோப்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோப்தாவுக்கு...

    பாலக்கீரை - 1 கட்டு,
    பன்னீர் - 15 துண்டுகள்,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
    இஞ்சி - 1/4 இன்ச் துண்டு.

    கிரேவிக்கு...

    வெங்காயம் - 3,
    தக்காளி - 2,
    இஞ்சி - 1/2 இன்ச் துண்டு,
    கிராம்பு - 5,
    [பாட்டி மசாலா] தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1/4 கட்டு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாலக்கீரை, பன்னீர், சோள மாவு, [பாட்டி மசாலா] தனியாத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள், சிறிது உப்பு, இஞ்சி சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து மாவை சிறு உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] தனியாத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்ததும் பொரித்த கோப்தாக்களை போட்டு 5 நிமிடம் மிதான தீயில் வைத்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பாலக் கோப்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×