search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீலா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீலா

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த உணவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 4,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள்
    சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு சீலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×