search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ்

    குழந்தைகளுக்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிப்ஸை வீட்டிலேயே செய்வது ஆரோக்கியமானது. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - கால் கிலோ, 
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், 
    உப்பு - தேவையான அளவு, 
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 



    செய்முறை : 

    சர்க்கரை வள்ளிக் கிழங்கை மண் போக நன்கு கழுவி தோல் சீவவும். பிறகு ஓரங்களை நீக்கி விட்டு மீண்டும் கழுவி சிப்ஸ் போல சீவி சுத்தமான வெள்ளைத் துணியில் பரத்தவும். 

    வாணலியில் எண்ணெய் காய விட்டு சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக சீவிய சிப்ஸ்களை போட்டு கருகாமல் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 

    எடுத்த சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு இதன் மீது உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் தூவி நன்றாக குலுக்கி காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பத்து நாட்கள் வரை வைத்திருந்து சுவைக்கலாம். 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×