search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல்
    X

    சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல்

    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் குடைமிளகாய் வைத்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    இறால் - 1 கிலோ 
    பச்சை குடைமிளகாய் - 2
    சிவப்பு குடைமிளகாய் - 1 
    வெங்காயம் - 4
    பூண்டு - 6 பல்
    [பாட்டி மசாலா] தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து 
    உப்புத்தூள் - 2 டீ ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு




    செய்முறை : 

    இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். 

    வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். 

    பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். 

    அடிகனமான சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். 

    பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவேண்டும். 

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும். 

    பிறகு அதில் [பாட்டி மசாலா] தனியாத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவேண்டும். 

    குடைமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். 

    ஐந்து நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.

    சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×