search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு அருமையான வாத்துக் கறிக்குழம்பு
    X

    தோசைக்கு அருமையான வாத்துக் கறிக்குழம்பு

    வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
    தேவையான பொருட்கள் : 

    வாத்துக்கறி - 1/2 கிலோ 
    வெங்காயம் - 1
    பூண்டு - 10 பற்கள் 
    தக்காளி - 1
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
    [பாட்டி மசாலா] மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
    கொத்தமல்லி - சிறிது 
    எண்ணெய் - தேவையான அளவு 
    சீரகம் - 1/4 டீஸ்பூன் 
    கறிவேப்பிலை - சிறிது 
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை: 

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

    வாத்துக்கறியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். 

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 

    வெங்காயம் பொன்னிறடாக வதங்கியதும் அதில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, அத்துடன் வாத்துக்கறியை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். 

    பிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். 

    கறியானது நன்கு வெந்து, கிரேவி போன்று சற்று கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வாத்துக்கறி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×