search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பேபி கார்ன் - மேத்தி கிரேவி
    X

    சூப்பரான பேபி கார்ன் - மேத்தி கிரேவி

    நாண், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த பேபி கார்ன் - மேத்தி கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பேபி கார்ன் - 10, 
    வெந்தயக்கீரை - கால் கப், 
    முந்திரிப் பருப்பு - 5, 
    வெங்காயம் - 1, 
    தக்காளி - ஒன்று, 
    சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன், 
    ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், 
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், 
    [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், 
    ஏலக்காய் - ஒன்று, 
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை : 

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். 

    வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். 

    கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். 

    இதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், உப்பு, [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். 

    பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தயகீரை சேர்த்து வதக்கவும். 

    இதில் வேக வைத்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும். 

    அடுத்து அதில் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். 

    கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.

    சூப்பரான பேபி கார்ன் - மேத்தி கிரேவி ரெடி.
    Next Story
    ×